

டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் வால்வார்த், லீ ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். வால்வார்த் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் த்ரிஷா செட்டி 24 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
92 ரன்கள் குவித்த லைசல் லீ
ஆனால், மற்றொரு தொடக்க வீராங்கனை லீ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்தில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன் 92 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
அதன்பின் வந்த கேப்டன் நிகெர்க் 57 ரன்னும், டிரையோன் 18 பந்தில் 24 ரன்களும் சேர்க்க, தென்ஆப்பிரிக்கா 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் ஷிகா பாண்டே அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
திரிஷா செட்டி
பின்னர் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுவிடும்.