பெண்கள் உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா- ஆஸி., இங்கிலாந்து- தெ.ஆ. பலப்பரீட்சை

பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
பெண்கள் உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா- ஆஸி., இங்கிலாந்து- தெ.ஆ. பலப்பரீட்சை
Published on

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானை இலங்கையும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்தும், தென்ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தின.

நேற்றுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவுற்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் இங்கிலாந்து 7 போட்டிகளில் 6 வெற்றி, 1 தோல்வியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 வெற்றி, 1 தோல்வியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா நான்கு வெற்றி, 2 தோல்விகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடர் விதிப்படி முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் முதல் இடத்தை பிடிக்கும் அணி, நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடனும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணி, 3-வது இடத்தை பிடிக்கும் அணியுடனும் மோத வேண்டும்.

அதன்படி 2-வது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவும், 3-வது இடம் பிடித்துள்ள இந்தியாவும் 2-வது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. முதல் அரையிறுதியில் முதல் இடம் பிடித்துள்ள இங்கிலாந்தும், 4-வது இடத்தை பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com