

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 15-ந்தேதி எதிர் கொள்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியாவும்தான் மோதிய 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்ததில் ‘ஏ’ பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின.
முதலில் விளையாடிய இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ரன்னே எடுக்க முடிந்தது. மழையால் இங்கிலாந்துக்கு 16 ஓவர்களில் 64 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 9.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.