திருவிடைமருதூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் புதிதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடையினை திறக்கக்கூடாது என்று அப்பகுதி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்திய காட்சி.
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்திய காட்சி.
Published on

கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் புதிதாக திறக்க பட உள்ள டாஸ்மாக் கடையினை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

டாஸ்மாக் கடை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் நடத்தினர். மேலும் தொடர்ந்து வருவாய்த்துறையினர் மூலம் மதுகடை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். 

இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் டாஸ்மாக் கடையை மீறி திறந்தால் மறியலில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com