ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம்-செல்போன் திருடிய பெண் சிக்கினாள்

தவளக்குப்பத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம், செல்போன் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே காட்டுக்குப்பத்தில் தனியார் அப்பார்மெண்டில் வசித்து வருபவர் குமாரசாமி(வயது54). இவர் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் மதுபான கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி(52). நேற்று மாலை இவர் புதுவை செல்வதற்காக தவளக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கடலூரில் இருந்து புதுவை செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.

பஸ் புறப்பட்ட சிறிது தூரத்தில் கை பையில் வைத்திருந்த மணிபர்சை காணாமல் ஜெயந்தி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அந்த மணிபர்சில் ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன் வைத்திருந்தார். இதனால் பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயந்தி அருகே சந்தேகப்படும்படி பயணம் செய்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண்தான் மணிபர்சை திருடியது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த பெண்ணை தளவளக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து மணிபர்சை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சாந்தி(38) என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து சாந்தியை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜப்படுத்தினர். பின்னர் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com