மாணவிகளுக்கு வலைவீசிய பெண் வார்டன்- முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு

மாணவிகளுக்கு வலைவீசிய பெண் வார்டன் புனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்னும் ஒருசில நாட்களில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாணவிகளுக்கு வலைவீசிய பெண் வார்டன்- முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு
Published on

கோவை:

கோவை பீளமேட்டில் இயங்கி வரும் தனியார் பெண்கள் விடுதியில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டன் புனிதாவை(32) போலீசார் தேடி வருகின்றனர்.

கணவரை பிரிந்து வாழும் அவருக்கு ஒரு காதலன் இருப்பதாக கூறப்படுகிறது. செல்போனை அணைத்து விட்டு காதலனுடன் தப்பிச் சென்ற புனிதா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை தனிப்படை போலீசார் பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் தேடினர். கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் புனிதாவிடம் இதற்கு முன்பு பெண்கள் யாரும் ஏமாந்தார்களா? புனிதாவின் பின்னணி என்ன? அவருடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்- யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெண் வார்டன் புனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்னும் ஒருசில நாட்களில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புனிதாவுக்கு ஜாமீன் கொடுக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் அரசு வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com