ஏரியூர் அருகே பெண் காய்கறி வியாபாரி தற்கொலை

ஏரியூர் அருகே பெண் காய்கறி வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த நாகமரை அருகே உள்ள நெருப்பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 52). கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்து விட்டார். பாப்பாத்தி நெருப்பூரில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். பாப்பாத்திக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி சேலத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் பாப்பாத்தி தூங்க சென்றார். இன்று காலை நீண்டநேரமாகியும் பாப்பாத்தியின் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது பாப்பாத்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும், ஏரியூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாப்பாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாப்பாத்தி தனது மகளுக்கும், மகனுக்கும் கடன் வாங்கி திருமணம் செய்து வைத்தார். அந்த பணத்தை திருப்பிதர முடியாமல் கடன் தொல்லையால் அவதிப்பட்டதாக தெரிகிறது. மேலும் அவருக்கு காய்கறி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், பெற்ற பிள்ளைகள் கண்டு கொள்ளாமல் இருந்ததாலும் மனமுடைந்த காணப்பட்ட பாப்பாத்தி தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com