பெற்றெடுத்து, தத்து கொடுத்த தாய் அருகாமையில் இருப்பதை 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இணைந்த மகள்

தன்னை பெற்றெடுத்து, வளர்க்க வழியில்லாமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்ற தாய், தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை பல ஆண்டுகள் கழித்து அறிந்த மகள் ஆனந்தப் பரவசம் அடைந்த சம்பவத்தை அறிந்து கொள்வோமா?
பெற்றெடுத்து, தத்து கொடுத்த தாய் அருகாமையில் இருப்பதை 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இணைந்த மகள்
Published on

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் பிரான்ஸைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியாக இருந்த இவரை காதலன் கைவிட்டு சென்றுவிட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண் குழந்தையை பிரசவித்தார்.

அதை வளர்க்க வழியில்லாததால் அந்த காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்பு தேடி சென்று விட்டார். அக்குழந்தைக்கு லா-சோன்யா மிச்சேல் கிளார்க் என்று பெயர் சூட்டிய காப்பக நிர்வாகிகள் சிறு வயதிலேயே அவளை ஒரு தம்பதியருக்கு தத்து மகளாக ஒப்படைத்து விட்டனர்.

அந்த தம்பதியரின் செல்ல மகளாக வளர்ந்துவந்த போதிலும் தான் தத்தெடுக்கப்பட்ட மகள்தான் என்பதை அறிந்து கொண்ட சோன்யாவுக்கு இப்போது 38 வயது ஆகின்றது. ஓஹியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள இன்போசிஷன் என்ற கால் சென்டர் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வருகிறார்.

என்னதான் தத்தெடுத்த பெற்றோர் பாசத்தை பொழிந்து வளர்த்திருந்தாலும் ‘நம்மை பெற்ற தாயின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா..?’ என்ற ஆசையும் ஏக்கமும் சோன்யாவின் மனதில் நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது? என்ற பெருங்குழப்பம் அந்த ஆசைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

இந்நிலையில், 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும் இடையில் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதில் அனாதைகள் காப்பகத்தில் பிறந்த சோன்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்ஸைன் சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது.

அந்த பெயரை வைத்து ‘பேஸ்புக்’கில் தேடியபோது சோன்யாவுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பணிபுரியும் கால் சென்டரான இன்போசிஷன் நிறுவனத்தில் தனது தாயும் வேலை செய்கிறார். அவரது வசிப்பிடம் தனது விட்டில் இருந்து சுமார் 6 நிமிட பயண தூரத்தில்தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட சோன்யா மகிழ்ச்சியில் கூத்தாட தொடங்கினார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது தாயின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து உடனடியாக அவருடன் பேசினார். ’நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வரலாமா?’ என சோன்யா பாசத்தூண்டில் போட, பிரான்ஸைன் சிம்மன்ஸ் விம்மிவெடித்து, கதறி அழத்தொடங்கி விட்டார்.

பின்னர், தாயும் மகளும் முதன்முறையாக சந்தித்துக் கொள்ள, தனது பிறப்புக்குப் பின்னர் பிரான்ஸைன் சிம்மன்ஸ்-க்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள் இருப்பதை அறிந்த சோன்யா, ஆனந்தப் பரவசத்தில் மிதக்க தொடங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com