பெண்ணை கிண்டல் செய்த தகராறில் 3 பேர் மீது தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது

கும்பகோணம் அருகே பெண்ணை கிண்டல் செய்த தகராறில் 3 பேர் மீது தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணை கிண்டல் செய்த தகராறில் 3 பேர் மீது தாக்குதல்: 2 வாலிபர்கள் கைது
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே மாத்தி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவரது மகன் சூரியகுமார். இவர் பூமிநாதன் என்பவரது இடத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது அவ்வழியே நடந்து சென்ற பூமிநாதனின் அண்ணன் அயோத்தி என்பவரது மகள் சத்தியாவை சூரியகுமார் கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சகோதரர்கள் செல்வகுமார், சக்திவேல் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பூமிநாதன், அயோத்தி, சக்திவேல், செல்வகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 5 பேர் சூரியகுமார் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 5 பேரும் சூரிய குமார், குணால் மற்றும் ஜெபமாலா ஆகிய 3 பேரையும் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சூரியகுமாரின் தந்தை விஜயகுமார் பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன், சக்திவேல், ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com