சாத்தான்குளம் அருகே பெண் மானபங்கம்- வாலிபர் கைது

சாத்தான்குளம் அருகே இயற்கை உபாதையை கழிப்பதற்கு சென்ற பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள வசுவப்பநேரி தெற்குதெருவை சேர்ந்தவர் மாடசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகசெல்வி(வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் முருகன்(26).

சம்பவத்தன்று முருகசெல்வி இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள மறைவான இடத்திற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற முருகன் திடீரென முருகசெல்வியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகசெல்வி கத்தி கூச்சல் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த வேதமணி என்பவர்  உதவிக்கு வந்தார். ஆனால் முருகன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து சாத்தான்குளம் போலீசில் முருகசெல்வி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com