ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை மானபங்கம் செய்த வாலிபரை கைது செய்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது
Published on

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு சத்தியதாய் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி சுகந்தி (வயது 22). இவரது உறவினர் முரளி (31). கருப்பசாமி கேரளாவில் வேலை செய்து வருகிறார். சுகந்திக்கும் முரளிக்கும் இடையே மரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் அடிக்கடி முரளி சுகந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுகந்தியிடம் முரளி ஆபாசமாக பேசி அவரது ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சுகந்தி சத்தம் போட்டவாறே வெளியில் ஓடி வந்து விட்டார். மேலும் இது குறித்து சுகந்தி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மானபங்கம் செய்த முரளி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com