ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை மானபங்கம் செய்த தொழிலாளி கைது

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணை மானபங்கம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on: 

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே வரு‌ஷநாடு காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி திவ்யா (வயது 28). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இங்கு வந்த வனராஜ் (48) என்ற தொழிலாளி திவ்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென அவரது கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவரிடம் சொல்வதாக கூறியுள்ளார். ஆனால் வனராஜ் அவ்வாறு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இது குறித்து வரு‌ஷநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து வனராஜை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com