பேரளம் அருகே பெண்ணை மானபங்கம் செய்த அண்ணன்-தம்பி கைது

பெண்ணை மானபங்கம் செய்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரளம் அருகே பெண்ணை மானபங்கம் செய்த அண்ணன்-தம்பி கைது
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே பேரளம், நடுகந்தல்குடியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 30). இவர் தனது மகன் அரிகரனை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அரிகரன் கொட்டி விட்டுள்ளான். இதனை கண்ட மஞ்சுளா தனது மகனை திட்டி உள்ளார். அப்போது கடையில் குடிபோதையில் இருந்த கண்ணன் என்பவர் மஞ்சுளா தன்னைத்தான் திட்டியதாக கருதி தகராறு செய்துள்ளார். 

பின்னர் கண்ணன் தனது தம்பி கார்த்தி என்பவருடன் மஞ்சுளா வீட்டுக்கு சென்று அவருடன் தகராறு செய்து அவரது ஆடையை கிழித்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி மஞ்சுளா பேரளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குப்பதிவு செய்து கண்ணன், கார்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com