

சேலம்:
சேலம் குகை சாமுண்டி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவருடைய மனைவி காயத்திரிதேவி (வயது 28). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். காயத்திரிதேவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை பார்ப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து சேலம் வந்தார். பின்னர் அவர் தந்தை உடன் இருந்து கவனித்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தந்தை இறந்தார்.
இதனால் அவர் மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அவரால் மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.