அதிராம்பட்டினத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

அதிராம்பட்டினத்தில் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவீந்தர். கட்டிட ஒப்பந்தக்காரர். இவருடைய மனைவி தமிழரசி (வயது35). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தமிழரசியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் மன வேதனை அடைந்த தமிழரசி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து ரவீந்தர் அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com