குழந்தை இல்லாத விரக்தியில் தீ குளித்து இளம்பெண் தற்கொலை

கோவையில் திருமணமாகி 2½ வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் இளம்பெண் விரக்தியில் தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
குழந்தை இல்லாத விரக்தியில் தீ குளித்து இளம்பெண் தற்கொலை
Published on

கோவை:

கோவையில் திருமணமாகி 2½ வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் இளம்பெண் விரக்தியில் தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாணூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். விவசாயி. இவரது மனைவி திவ்யா (வயது 31).

இவர்களுக்கு கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக திவ்யா மனவேதனையுடன் காணப்பட்டார். இதனால் மனம் உடைந்த திவ்யா மண்எண்ணெய் ஊற்றி தீ குளித்தார். இதில் உடல் கருகிய அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 2½ வருடத்தில் திவ்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com