காயல்பட்டிணத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

காயல்பட்டிணத்தில் காதல் தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டிணம் மங்களவாடி சல்லிகிரடு பகுதியை சேர்ந்தவர் ராஜ். சென்னையில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி பூங்கணி. இவர்களது முதல் மகள் கவுசல்யா(21), அங்குள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இரண்டாவது மகள் கவுரி(19) பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். 

கவுரியும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கவுரியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் குளியலறைக்கு சென்றவர் அங்கிருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

அவரது அலறல் சத்தம்கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று உடல் கருகிய நிலையில் இருந்த கவுரியை மீட்டு திருச்செந்தூரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com