துடியலூர் போலீஸ் நிலையம் முன்பு 3 வயது மகளுடன் பெண் தர்ணா போராட்டம்

தனது புகாரை வாங்க கோரி துடியலூர் போலீஸ் நிலையம் முன் மகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
போராட்டம்
போராட்டம்
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் பி அண்டு டி காலனி பாபாநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முக வடிவு. இவரது கணவர் சுசில்குமார். இறந்துவிட்டார். இவருக்கு 3 வயதில் ஜெயஸ்ரீதுர்கா என்ற மகள் உள்ளார்.

இவர் தனது வீட்டின் அருகே கோவில் மற்றும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சண்முகவடிவின் வீடு மற்றும் கடையை மர்மநபர்கள் அடித்து நொறுக்கியதாக கூறி துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தார். ஆனால் போலீசார் அவரது புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதையடுத்து சண்முக வடிவு தனது புகாரை வாங்க கோரி நேற்று இரவு முதல் இன்று காலை வரை துடியலூர் போலீஸ் நிலையம் முன் விடிய விடிய தனது மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏற்கனவே இவர் அவரது சகோதரர், தங்கை மற்றும் தாயார் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

ஆனாலும் அவர் இதனை ஏற்காமல் அந்த இடத்தை விட்டு நகராமல் புகாரை ஏற்க வேண்டும் என்று கூறி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்றனர். பெண்ணின் தொடர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com