சங்கரன்கோவில் அருகே வீட்டில் தூங்கிய பெண் தலையாரியிடம் செயின் பறிப்பு

வீட்டில் தூங்கிய பெண் தலையாரியிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
சங்கரன்கோவில் அருகே வீட்டில் தூங்கிய பெண் தலையாரியிடம் செயின் பறிப்பு
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது  மனைவி ஆலம்மாள் (37). இவர் அந்த ஊரில் தலையாரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் உள்ள அறையில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அடுத்த அறையில் கருத்தப்பாண்டி தூங்கி கொண்டிருந்துள்ளார். 

நள்ளிரவில் மொட்டை மாடி வழியாக இறங்கி வந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த ஆலம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இதனால் பதறிப்போன ஆலம்மாள் இதுபற்றி சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com