குளச்சல் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

குளச்சல் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
குளச்சல் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
Published on

நாகர்கோவில்:

குளச்சல் அருகே உள்ள குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட். மீனவர். வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி (வயது 25). நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் காற்றுக்காக மேரி தனது வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மேரியின் வீட்டுக்குள் புகுந்தார். அவர் மேரி அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த மேரி, வீட்டில் திருடன் நுழைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

அக்கம்பக்கத்தினர் எழுந்து வந்து திருடனை துரத்தினர். அதற்குள் திருடன் 8 பவுன் தங்கச்சங்கிலியுடன் தப்பிச் சென்றான். இது குறித்து மேரி குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தூங்கிக் கொண்டிருந்த தன்னிடம் இருந்து மர்ம நபர் 8 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டதாகவும், அந்த நபரை கண்டுபிடித்து நகையை மீட்டுத் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com