கணவரின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற தாய்

உத்தரபிரரேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கணவரின் சிகிச்சைக்காக பிறந்து 15 நாளே ஆன குழந்தை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற தாய்
Published on

மீரட்:

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மிர் காஞ்ச் என்ற இடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவருடைய சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது. ஆனால், வீட்டில் போதிய பணம் இல்லை.

அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகி இருந்தது. இதற்கான பணத்தை திரட்டுவதற்கு மனைவி முயற்சி மேற்கொண்டார். ஆனால், பணம் கிடைக்கவில்லை.

இதனால் தனக்கு பிறந்த குழந்தையை விற்று அதன் மூலம் பணம் பெற முயற்சித்தார். பலரிடம் விலை பேசினார். ஒரு நபர் ரூ.45 ஆயிரம் விலை பேசி பணத்தை கொடுத்து விட்டு குழந்தையை வாங்கி சென்றார். அந்த பணத்தை ஆஸ்பத்திரியில் செலுத்தி கணவரின் உயிரை காப்பாற்றினார்.

இந்த வி‌ஷயம் வெளியே கசிந்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது சம்பந்தமாக அந்த பெண் கூறும் போது, எனது கணவர் சிகிச்சைக்கு பணம் திரட்ட வேறு வழியே இல்லை. அப்போது தான் கணவரா? குழந்தையா? என்று முடிவு எடுக்கும் நிலைக்கு நான் வந்தேன்.

குழந்தையை விற்று கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து குழந்தையை விற்றேன். இதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறினார்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒருவர் தனது குழந்தையை 200 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com