கைது
கைது

போடி அருகே பெண் மீது தாக்குதல்- 2 பேர் கைது

போடி அருகே கேலி செய்ததை தட்டிக் கேட்ட பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on

தேனி:

போடி அருகே துரைராஜபுரத்தைச் சேர்ந்தவர் லிங்கம் மனைவி நாகலெட்சுமி (வயது 38). சம்பவத்தன்று முனீஸ்வரன் கோவிலில் விருந்து பரிமாறினார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த குட்டி மணி அவரை கேலி செய்தார். இதனை நாகலெட்சுமி தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த குட்டி மணி மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர் நாகலெட்சுமியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்த குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com