வல்லம் அருகே பெண் இறப்பில் மர்மம்: போலீசில் தந்தை புகார்

வல்லம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெண் மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
பெண் மரணம்
பெண் மரணம்
Published on

வல்லம்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காட்டுக்குறிச்சி ஆழிவாய்க்காலை சேர்ந்த தங்கராசு மகள் ஸ்ரீதேவி. இவருக்கும் மருங்குளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

கடந்த 27-ந் தேதி ஸ்ரீதேவியை தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 

இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீதேவியின் தந்தை தங்கராசு தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக வல்லம் போலீசில் புகார் செய்தார. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com