பெண்ணிடம் பணம் பறித்த 3 பேர் கைது

பெண்ணிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி இளவரசி (வயது 45). இவர் நேற்று முன்தினம் மதியம் சங்குப்பேட்டை ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன்(25), செல்லமுத்து மகன் சூர்யா(24), ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன்(24) ஆகிய 3 பேரும் சேர்ந்து இளவரசியை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி இளவரசியிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம். இது தொடர்பாக இளவரசி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சூர்யா, தமிழ்ச்செல்வன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com