நல்லம்பள்ளி அருகே பெண் மாயம்

நல்லம்பள்ளி அருகே தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு முருகம்மாள் (வயது 33) என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி முருகம்மாள் கடந்த மாதம் 22-ந்தேதி அவரது தாயார் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் முருகம்மாள் வீடுதிரும்பவில்லை. இது குறித்து மணிகண்டன் பல இடங்களில் தேடிப்பார்த்தும் முருகம்மாள் கிடைக்கவில்லை. எனவே மணிகண்டன் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் எனது மனைவியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார்.

இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன முருகம்மாளை தேடி வருகின்றனர்.        

X

Maalai Malar
www.maalaimalar.com