கிருஷ்ணகிரி அருகே சுவர் இடிந்து பெண் பலி

கிருஷ்ணகிரி அருகே சுவர் இடிந்து பெண் பலியானார். இது குறித்து காவேரிப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே சுவர் இடிந்து பெண் பலி
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தேர்ப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் வேடியம்மாள். இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு தனது தாயுடன் தேர்ப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று மாலை முதலே காவேரிப்பட்டினம் பகுதியில் கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை வேடியம்மாள் தூங்கி கொண்டிருந்த வீட்டின் ஒரு பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி தவித்த அந்தப்பகுதி மக்கள் வேடியம்மாளை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவேரிப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த வந்த வட்டாட்சியர் கன்னியப்பன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் வனஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com