சூளகிரி அருகே பெண் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

சூளகிரி அருகே விவசாய நிலத்தில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த புனல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் முனிவெங்கடப்பன். இவரது மனைவி சின்னம்மாதேவி (வயது 40).

இன்று காலை பீர்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய விளைநிலத்தில் சின்னம்மாதேவி கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியாக வந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது விவசாய நிலத்தில் பிணமாக கிடந்த சின்னம்மாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சின்னம்மாதேவி எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com