நெல் அறுவடை எந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தலை துண்டாகி பலி

திருச்சி அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தலை துண்டாகி துடிதுடித்து இறந்தார்.
நெல் அறுவடை எந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தலை துண்டாகி பலி
Published on

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் மேலகொட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர் நெல் அறுவடை பணிக்கு சென்று வந்தார். 

நேற்று மாலை மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவிமங்கலம் வயலில் நடைபெற்று வந்த அறுவடை பணியில் ஈடுபட்டார். அங்கு அறுவடை எந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பணியில் ஈடுபட்டிருந்த சித்ராவின் சேலை திடீரென அறுவடை எந்திரத்தில் சிக்கிக் கொண்டது. அதனை எடுக்க முயல்வதற்குள் சித்ராவின் தலை எந்திரத்தில் சிக்கியதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். எந்திரத்தின் சத்தம் அதிகமாக இருந்ததால், சித்ரா சிக்கியதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த யாரும் கவனிக்க வில்லை. 

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் சித்ரா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அறுவடை எந்திரத்தின் டிரைவர் ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com