அரியமங்கலத்தில் ஆடு மேய்த்த பெண் மின்சாரம் தாக்கி பலி

திருச்சி அரியமங்கலத்தில் ஆடு மேய்த்த பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியமங்கலத்தில் ஆடு மேய்த்த பெண் மின்சாரம் தாக்கி பலி
Published on

அரியமங்கலம்:

திருச்சி அரியமங்கலம் அற்புதசாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜனதா (வயது 47), ஆடு மேய்த்து வருகிறார். இவர் நேற்று அரியமங்கலம் உக்கடை பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்பகுதியில் ஒரு தனியார் டைல்ஸ் கடையின் குடோன் இருந்துள்ளது. அங்கு மின் இணைப்பிற்காக வந்த வயர் பாதுகாப்பின்றி கீழே கிடந்துள்ளது. இதனை கவனிக்காத ஜனதா எதிர்பாராமல் மிதித்ததாக கூறப்படுகிறது.

இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கிய அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் மின் வயரை பாதுகாப்பின்றி பயன்படுத்தியதாக குடோன் மேலாளர் அசோக் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com