தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் பெண்ணை கடத்தி கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது

தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் பெண்ணை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கற்பழித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் பெண்ணை கடத்தி கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது
Published on

தக்கலை:

தக்கலையை அடுத்த குமாரபுரம் சரல்விளை, புதிய காலனியைச் சேர்ந்த 46 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார்.

அந்த பெண், பொருட்கள் வாங்கவும், வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கி வரவும் அடிக்கடி கடை வீதிக்கு சென்று வருவார்.

இதுபோல கடந்த மாதம் 28-ந்தேதியும், பொருட்கள் வாங்க கடை வீதிக்கு சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு இரவு 8 மணியளவில் ஊர் திரும்ப பஸ்சுக்கு காத்து நின்றார்.

அப்போது அந்த வழியாக புதிய காலனியில் வசிக்கும் வாலிபர்கள் அனிஷ் (21), சம்பத் (24) இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பஸ் நிறுத்தத்தில் தனியாக நின்ற பெண்ணை கண்டதும் அருகில் சென்றனர். அவரிடம் வீட்டில் விட்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டனர்.

பின்னர் அவர்கள், பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை கடத்திச் சென்று இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அதிர்ச்சி அடைந்த பெண் அலறினார். அவரிடம் இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு இருவரும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் பற்றி பெண் உறவினர்களிடம் கூறி அழுதார். அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்யும்படி அறிவுறுத்தினர். அதன்படி, அந்த பெண் கொற்றியோடு போலீசில் புகார் செய்தார். அதில், அனிசும், சம்பத்தும் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி இருந்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் விசாரணை நடத்தி வாலிபர்கள் அனிஷ், சம்பத் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376(டி), (ஜி), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் கொற்றியோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com