ராஜஸ்தான்: 3 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் மட்டும் உயிருடன் மீட்பு

குடும்ப பிரச்சனை காரணமாக 3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.
ராஜஸ்தான்: 3 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் மட்டும் உயிருடன் மீட்பு
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பார்மார் மாவட்டத்தில் உள்ள கச்டாவ் கிராமத்தை சேர்ந்தவர் கிர்னிதேவி (35). இவருக்கு கல்பனா(6), கவிதா(4), ஹேமலதா (1) என 3 பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை கிர்னிதேவி, தனது 3 குழந்தைகளுடன் கிராமத்தில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், "வரும் வழியில் குழந்தைகள் இறந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிர்னிதேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.

இதுகுறித்து தோரிமனா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப பிரச்rனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த கிர்னிதேவி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com