மதுரையில் பெண் வக்கீலிடம் நகை பறிப்பு

மதுரையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வக்கீலிடம் 3¼ பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரையில் பெண் வக்கீலிடம் நகை பறிப்பு
Published on

மதுரை:

மதுரை அய்யர் பங்களா அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் பூங்கொடியாள் (வயது 35) வக்கீல்.

இவர் இருசக்கர வாகனத்தில் உத்தங்குடி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பூங்கொடியாள் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அண்ணாநகர் சதாசிவம் நகர் நக்கீரர் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பெங்களூருவில் என்ஜினீயராக உள்ளார். அவரது மனைவி ஜனனி (23).

சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் ஜனனி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com