மசாஜ் சென்டருக்குள் புகுந்து பெண்களிடம் நகை பறித்த கும்பல்

மசாஜ் சென்டருக்குள் புகுந்து பெண்களிடம் கத்தி முனையில் நகை பறித்த கும்பலில் ஒருவன் சிக்கினான். தப்பி ஓடிய 4 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மசாஜ் சென்டருக்குள் புகுந்து பெண்களிடம் நகை பறித்த கும்பல்
Published on

போரூர்:

சாலிகிராமம், ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் “அரோமா பியூட்டி பார்லர்” என்கிற பெயரில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு 3 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று மதியம் மசாஜ் சென்டருக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் 3 பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 செல்போன்கள், 2 பவுன் செயின், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 5 பேர் கும்பலை துரத்திச் சென்றனர். அதில் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து மசாஜ் சென்டர் மேலாளர் கார்த்திக், விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கோமதி பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அவன், எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பது தெரிய வந்தது.

தப்பி சென்ற கூட்டாளிகள் 4 பேர் குறித்து ஆற்காடு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com