திண்டுக்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த கும்பல் கைது

திண்டுக்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த கும்பல் கைது
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சித்ரா. திருச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்ற போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து மிரட்டினர். மேலும் சித்ராவிடம் இருந்து 9 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதே போல் திண்டுக்கல் பாதாள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரையும் ஒரு கும்பல் மிரட்டி அவரிடம் இருந்து 5 பவுன் தங்க செயின் மற்றும் மோதிரங்களை பறித்துச் சென்றனர்.

இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரித்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், நல்லதம்பி, வீர பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரே கும்பல் 2 பேரிடமும் நகை பறித்துச் சென்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடினர்.

நகை பறிப்பில் ஈடுபட்ட விஜயஜெயசீலன், மதிவாணன், விக்னேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com