திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

திருவள்ளூர் அருகே பெண் அணியிருந்த 3 பவுன் செயினை மோட்டார் சைக்கிள் வந்த மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
திருவள்ளூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

செவ்வாப்பேட்டை:

திருவள்ளூரை அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரி. தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை அவர் வேலை முடிந்து அவர் வீட்டிற்கு ஸ்கூட்டியில் வந்தார். கந்தன் கொல்லை அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சங்கரி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பினர்.

கும்மிடிப்பூண்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பூவிலன்பருதி. நேற்று இரவு அவர் கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் ரெயில்வே பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் கத்தி முனையில் பூவிலன் பருதியை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com