கோவை அருகே பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு

கோவை அருகே பெண்ணை கீழே தள்ளி நகை பறித்தவர்கள் குறித்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை அருகே பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு
Published on

கோவை:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சத்திய வள்ளி (52). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகில் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஒருவன் வண்டியில் இருந்து கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான்.

இது குறித்து சத்திய வள்ளி சிங்காநல்லூர் போலீசில் நேற்று மாலை புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சத்திய வள்ளியிடம் நகை பறித்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வருவதும், அதில் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் கீழே இறங்கி சத்திய வள்ளியிடம் வழி கேட்பது போல் நடித்து நகையை பறிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. நகை பறிப்பதை சத்திய வள்ளி தடுத்து போராடுகிறார். அவரை கீழே தள்ளி விட்டு நகையை பறித்து செல்லும் காட்சியும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

இந்த காட்சிகளை வைத்து நகையை பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com