சிறுவன் என ஏமாற்றி சிறுமிகளுடன் செக்ஸ்சில் ஈடுபட்ட பெண்ணுக்கு 8 ஆண்டு ஜெயில்

இங்கிலாந்தில் 16 வயது சிறுவன் என ஏமாற்றி 50-க்கும் மேற்பட்ட சிறுமிகளுடன் செக்ஸ்சில் ஈடுபட்ட பெண்ணுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்:

இங்கிலாந்தில் வின்செஸ்டர் பகுதியை சேர்ந்த பெண் ஜெம்மா வாட்ஸ்(21). இவர் ஆன்லைனில் தன்னை 16 வயது சிறுவன் என அறிமுகப்படுத்தி கொண்டாள். தனது பெயரை ஜேக்வாடன் என கூறிக்கொண்ட அவள் சிறுவன் போன்று உடை அணிந்து அந்த போட்டோவையும் இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பதிவு செய்தாள்.

அதன் மூலம் பல சிறுமிகளுடன் தொடர்பு கொண்டாள். அவர்களை ‘பேபி’ உள்ளிட்ட செல்லப் பெயர்களில் அழைத்து பழக்கம் ஏற்படுத்தி கொண்டாள்.

பின்னர் அவர்களை நேரில் சந்தித்து, ஆசை வார்த்தை கூறி தனது ‘செக்ஸ்’ வலையில் வீழ்த்தினாள். அது போன்று 50-க்கும் மேற்பட்ட சிறுமிகளை சீரழித்தாள்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். எனவே ஜெம்மா வாட்ஸ்சை போலீசார் கைது செய்தனர். அவள் மீது வின்செஸ்டர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அவளை குற்றவாளி என அறிவித்து 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com