திருக்கோவிலூர் அருகே பெண் கற்பழிப்பு- வாலிபருக்கு வலைவீச்சு

திருக்கோவிலூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்று முட்புதருக்குள் வைத்து கற்பழித்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருக்கோவிலூர் அருகே பெண் கற்பழிப்பு- வாலிபருக்கு வலைவீச்சு
Published on

திருக்கோவிலூர்:

ரிஷிவந்தியத்தை சேர்ந்த 30 வயது பெண். திருக்கோவிலூர் அருகே எறையூர் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ராஜா (வயது 23) என்பவர் அந்த பெண்ணை அங்குள்ள முட்புதருக்குள் தூக்கி சென்று, அவரை கற்பழித்ததாக கூறப்படுகிறது. 

அந்த பெண் கூச்சலிட்டதால், ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com