அரூரில் இளம்பெண் பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

அரூரில் இளம்பெண் பாலியல் புகாரில் சிக்கிய மகேந்திரமங்கலம் போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்டு
சஸ்பெண்டு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள ஈட்டியம் பட்டியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர்அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதில் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த அரூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தன்னை 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். 

இந்த புகார் தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதை தொடர்ந்து சுப்பிரணியம் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com