ஆலங்குடியில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

மறைவான இடத்தில் வைத்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
ஆலங்குடியில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
Published on

ஆலங்குடி:

ஆலங்குடி  அருகே  உள்ள காஞ்சிரான் கொல்லையைச் சேர்ந்த வேலாயுதம். இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவதன்று ஆலங்குடியில் வேலைக்கு சென்று விட்டு பஸ்சில் அரசடி பட்டிக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதி எஸ்.களபத்தைச் சேர்ந்த பழனிவேலு (வயது 36)  என்பவர் மோட்டார் சைக்கிளிலில் வந்தார். அவர் முத்துலட்சுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் மறைவான இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முத்துலட்சுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் சத்தம் போடவே பழனிவேலு அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

இது குறித்து முத்துலட்சுமி ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி பழனிவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com