சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் சில்மிஷம்- 2 பேர் கைது

சங்கரன்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் சில்மிஷம்- 2 பேர் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரை அடுத்த சம்சிகாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி வர்சில்ஜோஸ் (எ) ரோசி. பாலமுருகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். ரோசி மட்டும் சம்சிகாபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் ரோசி மட்டும் தனியாக இருந்தார். 

அப்போது அங்கு வந்த சம்சிகாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (34), முப்பிடாதி (29) ஆகியோர் கதவை தட்டி தண்ணீர் கேட்டனர். பின்னர் ரோசி கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தனர். இதனால் பயந்து போன ரோசி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதனால் கருப்பாமி மற்றும் முப்பிடாதி அங்கிருந்து தப்பி ஓடினர். 

சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த கரிவலம் போலீசார் தப்பி ஓடிய கருப்பசாமி, முப்பிடாதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com