

மதுரை:
மதுரை சம்மட்டிபுரம் பொன்மேனி மெயின்ரோடு, முத்துநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மூவேந்திரன். இவரது மகள் மணிமேகலை (வயது 22). பி.இ. பட்டதாரி. இவர் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் மூவேந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணிமேகலையை தேடி வருகின்றனர்.
சோலையழகுபுரம் மெயின்ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி. இவரது மகன் காஜா முகமது (15). 9-ம் வகுப்பு மாணவன்.
கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற காஜா முகமது மாயமாகி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.