வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் பலி- உறவினர்கள் முற்றுகை

அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் இறந்ததால் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் பலி- உறவினர்கள் முற்றுகை
Published on

வேலூர்:

மேல்விஷாரத்தை சேர்ந்த ஹலீல் கார் டிரைவர். இவரது மனைவி ‌ஷம்மா (வயது 32). கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

‌ஷம்மா உடல்நிலை மோசமானது. இதுபற்றி உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ‌ஷம்மாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் ‌ஷம்மா இறந்தார்.

இதனைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். ‌ஷம்மாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்தவர்கள் அவரது சாவுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மட்டோம் என கூறி முற்றுகையிட்டனர்.

வேலூர் டி.எஸ்.பி. ராதாகிரு‌ஷண்ன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com