தஞ்சையில் பெண் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

தஞ்சையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் மர்ம மரணம்
பெண் மர்ம மரணம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி சிறப்பு அங்காடி முன்பு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது இன்று காலையில் தெரியவந்தது. இதனை கண்ட பொதுமக்கள், காவிரி சிறப்பங்காடி ஊழியர்கள் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் சிவப்பு நிற சேலை உடுத்தியிருந்தார். அவர் யா? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com