பழைய சாப்பாட்டை மகன் சாப்பிட மறுத்ததால் பெண் தற்கொலை

கோவை கருமத்தம்பட்டி அருகே பழைய சாப்பாட்டை மகன் சாப்பிட மறுத்ததால் சாணிப்பவுடரை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
Published on

கோவை:

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 36). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ரமேஷ் இறந்து விட்டார். ராஜேஸ்வரி மில் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். சம்பவத்தன்று ராஜேஸ்வரி தனது மகன்களுக்கு பழைய சாப்பாட்டை சாப்பிட கொடுத்தார். ஆனால் இவரது இளைய மகன் பழைய சாப்பாட்டை சாப்பிட மறுத்து பள்ளிக்கு சென்று விட்டார்.

இதனால் மனவேதனை அடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com