வரதட்சணைக் கொடுமை - எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தற்கொலை

டெல்லியில் வரதட்சணைக் கொடுமையால் எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணைக் கொடுமை - எம்.பி.ஏ. பட்டதாரி பெண் தற்கொலை
Published on

புதுடெல்லி:

புதுடெல்லியில் உள்ள பால்பீர் நகரில் ஜிதேந்திர ஷர்மா என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் தீபென்ஷா என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு ஷர்மாவின் பெற்றோர்கள் தீபென்ஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கூறியும் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தீபென்ஷா அறைக்குள் சென்று வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை என அவரின் தந்தைக்கு  ஷர்மாவின் பெற்றோர் தகவல் அளித்தனர்.

போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது தீபென்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தீபென்ஷாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜிதேந்திர வர்மா மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com