இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்கள் சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்கள் சூட்கேசில் அடைத்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சூட்கேஸ் - கோப்புப்படம்
சூட்கேஸ் - கோப்புப்படம்
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தின் சபேதாபாத் பகுதியில் பூட்டப்பட்டு கிடக்கும் தொழிற்சாலையின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சூட்கேஸ் மற்றும் பிளாஸ்டிக் பைகள் கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவற்றை கைப்பற்றி சோதனையிட்டனர். அந்த சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன. இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை சோதனையிட்டதில், அதில் அந்த பெண்ணின் தலையும், ஒரு காலும் இருந்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், “25 முதல் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் ஆகி இருக்கும். அந்த பெண் யார் என்பது இன்னும் தெரியவில்லை. வேறு எங்கோ வைத்து அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து இங்கே வீசியுள்ளனர். இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com