கோவை அருகே பெண்ணிடம் 6¼ பவுன் செயின் பறிப்பு

கோவை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 6¼ பவுன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

கோவை:

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள குருடம்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ஜெயசுதா (வயது 45).

நேற்று மாலை இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஜெயசுதா கழுத்தில் அணிந்து இருந்த 6¼ பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த ஜெயசுதா இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 6¼ பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2018-ம் ஆண்டு 10 செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 44 செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com