சங்கரன்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் செயின் அபேஸ்

சங்கரன்கோவிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் முத்தையா(வயது 55). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலா (50). இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை அபேஸ் செய்துவிட்டு தப்பி சென்றார். 

அதிகாலை கண்விழித்து பார்த்தபோதுதான் கழுத்தில் இருந்த செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் முத்தையா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com