

முசாபர்நகர்:
உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லன்பூர் ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் சோனியா என்பவர் போட்டியிட்டார்.
இதற்காக அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் தேவேந்தர் என்பவரை முதலில் திருமணம் செய்திருந்தார். பின்னர் அவர் பிரிந்து சென்றதால் தேவேந்தரின் சகோதரரான சதேந்திராவை திருமணம் செய்துள்ளார். எனவே வேட்புமனுவில் கணவரின் பெயராக சதேந்திரா என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் கிராம வேட்பாளர் பட்டியலில் சோனியாவின் கணவராக தேவேந்திராவே இன்னும் இருக்கிறது. இதனால் கணவர் பெயரை மாற்றி எழுதியதாக சோனியாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஸ்ரீவத்சவா நிராகரித்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.